ஒற்றை நட்சத்திரம் Otrai Natchathram: Crime Thriller (Crime Thrillers (Ashok & Team)) (Tamil Edition)

99.00

Category:

Price: ₹ 99.00
(as of Jan 19,2021 18:23:29 UTC – Details)


"ஒற்றை நட்சத்திரம்" க்ரைம் வாசகர்களுக்கும் அசோக் ரசிகர்களுக்கும் எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் பொங்கல் விருந்து. அசோக் & டீம் கலக்கியிருக்கும் க்ரைம் த்ரில்லர். படிக்க எடுத்தால் முடிக்காமல் போக விடாத ஒற்றை நட்சத்திரம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.

நாவலிலிருந்து

"நான் செத்துப் போனாலும் இந்த பத்திரிக்கை தொடர்ந்து நடக்கும். என்னோட டீம்ல கடைசி ஒருத்தர் இருக்கிற வரைக்கும் இந்த பத்திரிகை நிற்காது."

***

பிரஸ் கிளப் இந்த விஷயத்தை எளிதில் விடாது. கொலை செய்யப்பட்ட பெண் நிருபர். எதிரிகளுக்குப் பஞ்சமே இருக்காது. அதுவும் இந்தப் பெண் எழுதும் கட்டுரைகள் எல்லாம் எல்லோரும் ஆவேசத்தைத் தூண்டுபவை.

***

"கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு தன் கிராமத்தில் தங்கி இருந்த கெட் வெல் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ராஜசேகர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.

கொலை நடந்த இடத்தில் ஒரு நட்சத்திரமும் கண்ணீர்த் துளிகளை சிந்தும் இரண்டு கண்களும் வரையப்பட்டிருப்பது அனைவரையும் பரபரப்பாக்கியிருக்கிறது.

இது பற்றி மேலும் கூடுதல் விவரங்களைத் தருகிறார் நமது செய்தியாளர் சந்தோஷ்."

***

"நீங்க அவங்கள கவனமாக கையாளணும். ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கிட்டீங்கன்னா அஃபிஷியலா எங்களால ஒண்ணும் பண்ண முடியாது."

***

"இப்ப கொலை தொடருமா இல்லையான்னு தெரியாது. அப்படியே கொலை தொடர்ந்தாலும் யாரைக் கொல்லுவான்னும் தெரியாது. நம்மளோட கவனத்தை தமிழ்செல்வன் மேலயும் அன்பு மேலயும் திருப்பிட்டு வேற யாரையும்
கொன்னாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை."

***

"அன்பு நீ ஒரு குழந்தை. இன்னும் என்னை எதுவும் செய்ய வெக்காத. செத்துப் போயிடுவ"

***

"உண்மைய சொல்லாம வெளியே நீ உயிரோட போக முடியாது. ஆஃப் த ரெக்கார்டா தான் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கோம்."

***

"எப்படி அடிக்கணுங்கிறது முக்கியமில்ல எங்க அடிக்கணுங்கிறதுதான் முக்கியம்"

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒற்றை நட்சத்திரம் Otrai Natchathram: Crime Thriller (Crime Thrillers (Ashok & Team)) (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top